Friday, 20 July 2018

நமக்கும் மேல ஒரு சக்தி இருக்கு.

நம்மல்ல பலரும் சொல்ற விஷயம்தான், நமக்கு மேல ஒரு சக்தி இருக்குன்னு  சொல்றது. இதை அனுபவ பூர்வமா சொல்றோமா,  இல்லை ஆராய்ச்சி பூர்வமா சொல்றோமான்னு கேட்டா, இதை யாராலும் நிரூபிக்க முடியாது.

இதை மனதால் மட்டும்தான் உணர முடியும். பலருடைய வாழ்க்கையில் இந்த சக்தி அசைக்க முடியாத இடத்தில் இருக்கிறது என்பதை மட்டும் உறுதியாக சொல்லலாம்.

ஒரு சிலருக்கு மட்டும் தான் இந்த சக்தி நல்லது செய்யுமா? என்று கேட்டால் அது அவருடைய மன நம்பிக்கையை பொறுத்தது என்பதுதான் உண்மை.

கடவுள் சக்தி உலகத்தில் அசைக்க முடியாத இடத்தில் இருக்கிறது என்பது எல்லோரும் அறிந்ததே. என்னதான் விஞ்ஞான வளர்ச்சி, அறிவியல் கண்டுபிடிப்புகள், செயற்க்கைகோள் என இருந்தாலும், அதற்க்கும் மேல உள்ள சக்திதான் இதெற்க்கெல்லாம் காரணம் என்று கண்டிப்பாக சொல்லலாம்.

எப்படின்னு கேட்கிறீங்களா? நம்முடைய விஞ்ஞான வளர்ச்சி, அறிவியல் கண்டுபிடிப்புகள், செயற்கைகோள் இதெல்லாம் சாத்தியமாக்கியது யாரென்றால், நம்மல்ல ஒருத்தருதான். அந்த ஒருத்தருக்கு இருந்த நம்பிக்கையே இந்த வளர்ச்சிக்கு காரணம். முடியும்ன்னு அவங்க மனதுக்குள் நுழைந்தது யார்ன்னு கேட்டால், யோசிக்காமால் சொல்லிவிடலாம் தன்னம்பிக்கைன்னு.

நான் அறிந்த வகையிலே, நமக்கு மேல ஒரு சக்தின்னு சொல்றது தன்னம்பிக்கைதான். கோயிலுக்கு நாம் போகிறோம், எதற்க்காக போகிறோம்? கோயிலுக்கு போய் கடவுளுக்கிட்ட கேட்டால்  நல்லது நடக்கும்ன்னு நினைத்துதான்.

கோயிலுக்கு செல்பவர்கள் அனைவரும் தங்களுக்கு கடவுள் துணை நிற்பார், நிச்சயம் காப்பார் என நினைப்பது ஒரு நம்பிக்கை. நம்பிக்கை இருக்கும் இடத்திற்க்கு அடிக்கடி செல்வது நல்லதுதானே. அதற்க்காக தான்,  நம்ம வீட்டில் உள்ள பெரியவர்கள் நம்மை கோயிலுக்கு செல் என்று அறிவுறுத்திக்கொண்டே இருப்பார்கள்.

கோயில், கடவுள் இதையெல்லாம் நம்பிக்கையொடு அணுகினால் நம் நம்பிக்கை வலுபெறும். இங்கு நம்பிக்கைதான் கடவுளாக காட்சியளிக்கிறார். ஆமாம் அங்கு கற்சிலையாக வீற்றிருப்பது நமக்கு மேல ஒரு சக்தின்னு சொல்ற நம்பிக்கை. இந்த கடவுளை தேடிதான் நூற்றுக்கணக்கான மக்கள் வந்து கொண்டுயிருக்கிறார்கள். கோயிலுக்கு சென்றால், நல்லது நடக்கும்ன்னு நினைக்கிறது ஒரு நம்பிக்கைன்னா, அங்கு அதை தேடி ஆயிரம் கணக்கில் மக்கள் சென்று வருவதை பார்ப்பது நம் நம்பிக்கையை ஏறக்குறைய நிறைவேற்றியே விடும். எங்கு சென்றால் நம்பிக்கை வளருமுன்னு நினைக்கிறோமோ, அங்கு செல்வதில் தப்பில்லையே. நம் நம்பிக்கை வளர்க்கும் இடத்திற்கு செல்வதை அதிகமாக்குவோம். கடவுள் இருக்கிறாரா? என்று கேட்டால், கண்டிப்பாக சொல்லுங்கள் நம்பிக்கை தான் கடவுள், கடவுள்தான் நம்பிக்கைன்னு.

இப்ப சொல்லுங்க, நமக்கும் மேல ஒரு சக்தி இருக்கு, அதுதான் நம்மை காப்பாற்றி கொண்டுயிருக்கிறது என்பது உண்மைதானே.

ஆனந்தம்




No comments:

Post a Comment