என்ன, வாழ்க்கை ஒரே மாதிரியா இருக்கா? போரடிக்குதா? எப்பப் பாரு பிரச்சனையாவே இருக்கா? அப்போதிலிருந்து இப்போ வரைக்கும் ஒரே மாதிரியான மனநிலைமைதானா? வளர்ச்சியே இல்லையா? காலையில எழுந்ததிலிருந்து தூங்குற வரைக்கும் ஒரே மாதிரியான வேலையைத்தான் இழுத்துபோட்டு செஞ்சிட்டு இருக்கீங்களா?
சாம்பார், ரசம், காரகுழம்பு, கரிகுழம்பு, மீன் குழம்புன்னு சதா ஒரே மாதிரியான சமையல் , அலுத்துப்போகுதுல்ல.
காலையில எழுந்திருக்கனும், பல் துலக்கணும், குளிக்கணும், சமையல் செய்யனும், சாப்பிடணும், துணி துவைக்கணும், டிவி பார்க்கணும், அப்புறம் மதியம் தூக்கம். திரும்பவும் அதே மாதிரியான் மீதி பாதி வேலை, துவைச்ச துணியை மடிக்கணும், அயர்ன் பண்ணணும், பாத்திரம் தேய்க்கணும் , வீட்டை சுத்தம் செய்யணும்...... ஏ ...அப்பா.....
காலம் காலமா இதையேத்தான் செய்யறோம். வாழ்க்கையோட ஒன்றாகிவிட்டது. பழகிப்போயிடுச்சி.
மேற்சொன்ன காரணங்கள் உங்களுக்கு மட்டுமில்ல, எல்லோருக்கும் இப்படித்தான் இருக்கு (நான் மட்டும் என்ன விதி விலக்கா) இதெல்லாம் மாறாது. இப்ப மட்டுமில்ல எப்போதுமே மாறாது. ஏன்னா, இதுதான் வாழ்க்கை. வாழ்ந்து தான் ஆகணும். வாழ்க்கை, வாழ்க்கையை மாத்திக்க முடியுமா? முடியாது.
வாழற நாமதான் மாத்திக்கணும். வாழ்க்கை ஒரே மாதிரியா கொண்டு போறதும், சுவாரஷ்யமா கொண்டு போறதும் நம்ம கையிலதான் இருக்கு.
வாழ்க்கையில பெரிய, பெரிய சாதனை பண்ணி சமுதாயத்தில் ஒரு பெயர் சொல்ற ஒரு ஆளா இருக்கிறவங்க, நம்மல மாதிரியே சலிச்சிகிட்டு இருந்திருந்தால், நாம அவங்களை பத்தி இப்போ பேசிகிட்டு இருப்போமா? ஒரு காலத்தில் அவங்களும் நம்ம சலிப்பு வாழ்க்கையை அனுபவிச்சவங்கத்தான்.
பெரிய பெரிய சாதனையெல்லாம் பண்ண வேண்டாம். நமக்கு தகுந்த மாதிரி, நம்மால என்ன செய்ய முடியும், என்ன மாதிரியான மாற்றங்களை கொண்டு வரமுடியுமுன்னு யோசிங்க.
உங்களுக்கு கோலம் போட தெரியுமா? ஓ...தெரியுமே. நான் தினமும் கோலம் போடுறேன். சரி....
கோலம் போட தெரியாதவங்க, முயற்சி செய்யலாமே? சின்ன சின்ன விஷயங்களில்தான் வாழ்க்கையின் பெரிய பெரிய சுவாரஷ்யமே இருக்கு. முதல்ல சின்ன சின்னதா கோலம் போட ஆரம்பிங்க. சரியா வரலேன்னு விட்டுடாதீங்க. முயற்சி மட்டும் தான் நம்முடைய மூலதனம் இங்கே. இன்னைக்கு பெரிய கோலம்போட்டு தெருவையே அசத்துறவங்க உங்களில் இருந்து வந்தவங்கதான். கோலம் போட ஆரம்பிச்சிட்டீங்கனா, நீங்களே வேண்டான்னு நினைச்சாலும் போடாமல் இருக்க முடியாது. கோலம் போடறது ஒரு கலை. கலையை கையில் எடுங்கள், கவலையை தள்ளி வையுங்கள்.
அடுத்து, உங்களுக்கு செல்ல பிராணின்னா பிடிக்குமா? ஓ... பிடிக்கும். அப்படின்னா உடனே வளர்க்க ஆரம்பிங்க. எத்தனை குடும்பத்தில் ஒரு செல்ல பிராணி, குடும்ப உறுப்பினராக இருக்கு தெரியுமா?. சொல்ல கேட்டு இருக்கேன். இப்ப நேரடியா உணர்ந்தும் இருக்கேன். உங்க வீட்டு நாயான்னு கேட்டா கூட முறைக்கிறாங்க. அது எங்க வீட்டு பாப்பா, பாப்பான்னு சொல்லுங்கன்னு சொல்றாங்க. அந்த பிராணியோட பாசம், குறும்புத்தனம், அறிவு, இதெல்லாம் பார்க்கும்போது நம்மல்லாம் தோற்று போயிடுவோம். சில நேரங்களில் அதோட அறிவு நம்மை பிரமிக்க வைக்கும். செல்ல பிராணியோட செலவழிக்கிற நேரம் நம்ம மகிழ்ச்சிக்கு உத்தரவாதம்.
வீட்ல செடியெல்லாம் வளர்க்கிற பழக்கம் இருக்கா? இல்லைன்னா உடனே செடி வளர்க்க ஆரம்பிங்க. இன்றைய காலத்தில இதெல்லாம் இப்ப அவசியமாயிடுச்சி. அவசியம் மட்டுமில்ல ஆரோக்கியமான விஷயமும்கூட. செடிகூட நம்ம மகிழ்ச்சிக்கு காரணமாயிருக்குது. தினமும் அதை கவனிப்பது, பார்க்கிறது, தண்ணீர் விடறது, தொட்டு பேசறது, மொட்டு விட்டுருக்கா, பூ வந்திருக்கான்னு, காய் வந்திருக்கா என தினமும் நேரம் செலவு செய்றது நம்ம ஆரோக்கியத்துக்கு தேவையான ஒரு விஷயமாயிடுச்சி. கவலையை மறக்க வச்சிடும். காய் கறிகளை நாமளே இயற்கையா வளர்த்து சாப்பிடுவது உடம்புக்கு, மனதுக்கு ஆரோக்கியம். செலவும் மிச்சம்.
பூக்கள் கட்டுவது கூட ஒரு கலைதான். சொந்தமா செடி வச்சிருந்திங்கன்னா பூ கட்டி நேரத்தை பயனுள்ளதாக்கலாம். இல்லைன்னா, உதிரியா பூக்கள் வாங்கி கட்டியும் பயன்படுத்தலாம். இந்த மாதியான விஷயங்கள் மூலம் நம் திறமையையும் வளர்த்துக்கலாம், தனிமையையும் இனிமையாக்கலாம் இதெல்லாம் சொல்லும்போது கொஞ்சம் சிரிப்பா கூட இருக்கலாம். நமக்கு கவலையிலிருந்து விடுபட ஒரு வழி வேணும். அதை மட்டும் மனசில வச்சிக்குங்க.
கைதொழில் ஒன்றை கற்றுக்கொள், கவலை உனக்கில்லை ஒத்துக்கொள்ன்னு சொல்ல கேள்விபட்டிருக்கோம். இது நூற்றுக்கு நூறு உண்மை. இதை அனுபவிச்சி சொல்றேன். நமக்குள்ள என்ன தேடுதல் இருக்குன்னு முதல்ல கண்டுபிடிங்க. எதில் ஆர்வமுன்னு யோசிங்க. அதை செயல்படுத்த பாருங்க. வருமானம், தன்மானம் இரண்டும் தலை நிமிர வைக்கும்.
நமக்குள்ள எவ்வளவோ திறமை இருக்கு. செயல்படுத்த கொஞ்சம் சோம்பேறித்தனம். அதை செய்யலாமா, இதை செய்யலாமா? ன்னு உங்க நேரத்துக்கு தீனி போடுங்க. உங்களுக்கு என்ன பண்ணணும்ன்னு தோணுதோ, அதை தைரியமா செய்ங்க. நமக்கு ஒரு அடையாளம் இருக்கணும். தனியா தெரியணும். ஏதோ ஒரு விஷயத்தில் முன் மாதிரியா இருக்கணும். மாற்றங்கள் இருந்தால்தான் மாற முடியும்.
ஒரே மாதிரியான வாழ்க்கைக்கு பழகிட்டோம் மாற்றத்தை கொண்டு வர ஒரு தயக்கம். யாராவது, எதாவது சொல்லிட்டாங்கண்ணா? சொல்லட்டும். உங்களுக்கு என்ன அதைப்பத்தி? இப்ப மட்டும் என்ன உங்களை பத்தி பேசாமலா இருக்காங்க? இதெல்லாம் நம்மலே சொல்லிக்கிற காரணமாகத்தான் தோணுது. இன்னும் சொல்ல போனால் நம்மை சுற்றி இருப்பவர்களும் நம் மாற்றத்துக்கு காரணமாத்தான் இருக்காங்க. அவர்களுடைய பொருளாதார வளர்ச்சியும், நம்மை மேல செல்ல தூண்டுதலாத்தான் இருக்கும்
நம்ம வாழ்க்கையை நாமத்தான் வாழனும். நம்ம சுற்றி நடக்கிற ஒவ்வொரு மாற்றமும் நமக்கு பாதிப்பை ஏற்படுத்தும். மாற்றத்தை ஏற்படுத்திக்கிட்டே இருக்கணும். ஒரே மாதிரியான வாழ்க்கை அனுபவம் போதும். நம்ம வாழ்க்கை, நம்ம மாற்றம், நம்மை மட்டுமில்ல நம் கூட இருக்கிறவங்களுக்கும் ஒரு தூண்டுதலா இருக்கணும். மாறுங்க, மாறுங்க, மாற்றத்தை ஏற்படுத்துங்க.
மாற்றம் ஏமாற்றாது.
மாற்றம் முன்னேற்றமே...
ஆனந்தம்.

No comments:
Post a Comment