அன்புக்கு மயங்காதவங்களே இந்த உலகத்தில் யாரும் இருக்க முடியாது. உச்சி முதல் பாதம் வரை நாம் அன்பாலே நிறைந்து இருக்கிறோம். ஆனால் ஏனோ அதை நாம் உணர மறுக்கிறோம். அதை செயல்படுத்த நம்மால முடியல. ஒருவிதமான இறுக்கத்தால கட்டி போட்டு விடுகிறோம். செயல்படுத்தாதனால செயலிழந்து மன கவலைக்கு ஆளாகிறோம்.
அன்பாக பார்க்கிறது, அன்பா நடந்துக்கிறது, அன்பாக பேசறது அப்படி என்ன கொடுமையான செயலா?
அன்பா பேசற ஒருத்தர், கடுகடுப்பாக பேசற ஒருத்தர்ன்னு இரண்டு பேரை பார்க்கிறோம். பேசுறோம். இந்த இரண்டு பேர்ல யாரை நமக்கு பிடிக்கும்? பேசுற இடம், பேசுற விஷயம் நமக்கு பிடிக்காமல் போனாலும் அங்கு அன்போடு நம்ம மனசுக்கு ஆறுதலான, உண்மையான பாசத்தோடு பேசுற ஒருத்தரைத்தான் நம் மனம் விரும்புது.
நாம் விரும்புவதை மற்றவர்கள் கொடுக்க வேண்டும் என நினைக்கிறோம். ஆனால் மற்றவங்களுக்கு நாம கொடுக்க மறுக்கிறோம். ஏன்?
ஏன்? முதல்ல நீ கொடு. அப்புறம் நான் தாரேன்.
இதென்ன காசா பணமா? கொடுத்தால் திரும்ப வராதுன்னு சொல்றதுக்கு. இதை கொடுத்தால்தான் திரும்ப வரும். அள்ளி அள்ளி கொடுக்கனும். கேட்காமலே கொடுக்கனும், திரும்ப திரும்ப கொடுக்கனும், நேரம் காலம் பார்க்காமல் கொடுக்கனும். இதுவும் ஒரு சொத்துதான். இந்த சொத்தை சம்பாதிப்பதுதான் இப்ப பெரிய சவாலா இருக்கு
இதுக்கு என்ன மூலதனம், என்ன பண்ணனும்?
அன்பு.. அன்பு.. அன்புதான் மூலதனம். பெரியவங்க முதல் சின்ன குழந்தைங்க வரை இதை யாரும் வேண்டாண்ணு சொல்லவே மாட்டாங்க. ஆனால் நாம கொடுக்கிறோமான்னு உங்க மனசை கேட்டு பாருங்க. ம்ம் கொடுக்கிறாமே அப்படின்னு டக்குன்னு மனசு சொல்லுமே.
இல்லைங்க., நம்ம கொடுக்கிறது இல்லை. அன்புங்கிறது அவ்வளவு நல்ல விஷயம். உடம்பு பூரா நிறைஞ்சி கிடக்கு. ஆனால் அதை உபயோகிக்கிறோமா? அதட்டி கிதட்டி மிரட்டி உருட்டித்தான் நம்ம ஆள நினைக்கிறோம். மிரட்டினால் பணிவாங்க, பயப்புடுவாங்கன்னு நினைக்கிறோம். அந்த கண்டிப்பைத்தான் ஆயுதமாக்கிறோம். ஆயுதத்தால் அடிபட்டவன் அதற்க்கு நிரந்தரமாக இருக்க மாட்டான். அன்பை தேடுவான் அதை நோக்கி ஓடுவான். எங்கு கிடைக்குதோ அங்கேயே இருக்க விரும்புவான்.
மற்றவங்களை விடுங்க நீங்க இருக்க விரும்புவீங்களா? அப்போ எதை செய்தால் நல்லது என்று நமக்கே தெரியும்போது நாம ஏன் அதை செய்ய மறுக்கிறோம். பொத்தி பொத்தி வச்சி என்னதான் பண்ணபோறோம்? அன்பை கையில் எடுக்க மறுக்கிறோம். எடுக்காதது யார் தப்பு தெரியுமா? இருட்டில் பேய் இருக்குன்னு சொல்லியே வளர்த்திட்டாங்க. நாமலும் அப்படியே வளர்ந்திட்டோம். ஏன் இருட்டில் பேய்தான் இருக்கணுமா? கடவுள் இருக்கக்கூடாதா? இப்படியேதான் நல்லத சொல்லி நம்மல பழக்கல. செயல் பழக்கமாக மாறும். பழக்கம் குணமாக மாற்றிவிடும்.
இருட்டில் பேய் இல்லைன்னு எப்போ நம்ம நம்புறோமோ, அப்பத்தான் நேர்மறையான விஷயங்களை கையில் எடுக்கத்தோனும். கண்டிப்பு என்கிற விஷயமும் பேய்தான். அன்புங்கிற கடவுளை கையில் எடுங்கள்.
அன்பால செய்ய முடியாத விஷயம்ன்னு இந்த உலகத்தில எதுவும் இல்லை. பாரபட்சம் இல்லாமல் அன்பை கொடுங்க. கணவனுக்கு கொடுங்க, மனைவிக்கு கொடுங்க, பிள்ளைங்களுக்கு கொடுங்க, அம்மா அப்பாவுக்கு கொடுங்க. நண்பர்களுக்கு, உறவினர்களுக்கு கொடுங்க.
பாசத்தோட கனிவான பேச்சு உங்களை பெரிய இடத்தில் வைக்கும்.
மனதுதான் பெரிய இடம்.
ஆனந்தம்.

No comments:
Post a Comment