Sunday, 22 July 2018

ஓ.....இது தானா அர்த்தம்.

பெரியவங்க எல்லோரும் நமக்கு பல நல்ல விஷயங்களை பல்வேறு முறைகளில் சொல்லி கொடுத்திட்டு போயிருக்காங்க.

ஆனால் அதற்கான அர்த்தங்களை நாம சரியாக புரிஞ்சிக்காம போயிட்டோம். நம்மை வழி நடத்துகிற, நெறி படுத்திற, மேம்படுத்துகிற, வாழ்க்கையின் மிக பெரிய அழிக்க முடியாத விஷயங்களில் ஒன்றுதான் பழமொழி.

பழமொழி என்றாலே பழமையான மொழி. ஆனால் அதில் ஒளிந்திருக்கும் வாழ்க்கைக்கான அர்த்தங்கள் இனிவரும் காலங்களிலே யாராலுமே சொல்லவே முடியாத வாழ்க்கை பொக்கிஷம்.

நம்ம வீட்ல அடிக்கடி சொல்லிட்டு இருப்பாங்க, அதாவது அடுத்தவங்க வீட்டு குழந்தையை தூக்கி வளர்த்தால், நம்ம வீட்டு குழந்தை தானா வளரும்ன்னு. என்னுடைய சின்ன வயசில இதை பல தடவை நான் கேட்டு இருக்கேன். ஆனால் அதற்க்கான அர்த்தம் அந்த வயதில எனக்கு புரியும்படியாக சொல்லல.

ஆனால் இந்த காலத்திலும் இதற்க்கான அர்த்தம் பலருக்கும் அறியாத ஒன்றாகதான் இருக்கிறது.

என் பெரியவர்கள் சொன்ன விஷயத்தை நான் இங்கு பகிர விரும்புகிறேன்

ஒரு பெண் திருமணமாகி, புகுந்த வீட்டுக்கு செல்லும்போது தன்னை பெற்றவர்கள், உடன் பிறந்தவர்கள், சொந்தங்கள், இதுவரை தான் வாழ்ந்த வீடு, வாழ்க்கை, எல்லாவற்றையும் தியாகம் செய்து விட்டு, தன் புகுந்த வீட்டுக்கு கடமையை செய்ய செல்கிறாள். இனிமேல் அவளுக்கு கணவனின் குடும்பம்தான் தன்னுடைய குடும்பம்.

அவ்வாறு செல்லும் பெண்ணை, தன் பெண்ணாக பாவித்து அவளுக்கு பிறந்த வீட்டில் கிடைத்த சந்தோஷத்தைவிட அதிகமாக கொடுத்து, அவளுக்கு எந்த குறையும் வைக்காமல் நன்றாக கவனித்தால், அவளுடைய வயிற்றில் வளரும் தன் குடும்ப வாரிசு நன்றாக வளரும் என்பதே இதன் உட்கருத்து.

ஆனந்தம்.



Friday, 20 July 2018

நமக்கும் மேல ஒரு சக்தி இருக்கு.

நம்மல்ல பலரும் சொல்ற விஷயம்தான், நமக்கு மேல ஒரு சக்தி இருக்குன்னு  சொல்றது. இதை அனுபவ பூர்வமா சொல்றோமா,  இல்லை ஆராய்ச்சி பூர்வமா சொல்றோமான்னு கேட்டா, இதை யாராலும் நிரூபிக்க முடியாது.

இதை மனதால் மட்டும்தான் உணர முடியும். பலருடைய வாழ்க்கையில் இந்த சக்தி அசைக்க முடியாத இடத்தில் இருக்கிறது என்பதை மட்டும் உறுதியாக சொல்லலாம்.

ஒரு சிலருக்கு மட்டும் தான் இந்த சக்தி நல்லது செய்யுமா? என்று கேட்டால் அது அவருடைய மன நம்பிக்கையை பொறுத்தது என்பதுதான் உண்மை.

கடவுள் சக்தி உலகத்தில் அசைக்க முடியாத இடத்தில் இருக்கிறது என்பது எல்லோரும் அறிந்ததே. என்னதான் விஞ்ஞான வளர்ச்சி, அறிவியல் கண்டுபிடிப்புகள், செயற்க்கைகோள் என இருந்தாலும், அதற்க்கும் மேல உள்ள சக்திதான் இதெற்க்கெல்லாம் காரணம் என்று கண்டிப்பாக சொல்லலாம்.

எப்படின்னு கேட்கிறீங்களா? நம்முடைய விஞ்ஞான வளர்ச்சி, அறிவியல் கண்டுபிடிப்புகள், செயற்கைகோள் இதெல்லாம் சாத்தியமாக்கியது யாரென்றால், நம்மல்ல ஒருத்தருதான். அந்த ஒருத்தருக்கு இருந்த நம்பிக்கையே இந்த வளர்ச்சிக்கு காரணம். முடியும்ன்னு அவங்க மனதுக்குள் நுழைந்தது யார்ன்னு கேட்டால், யோசிக்காமால் சொல்லிவிடலாம் தன்னம்பிக்கைன்னு.

நான் அறிந்த வகையிலே, நமக்கு மேல ஒரு சக்தின்னு சொல்றது தன்னம்பிக்கைதான். கோயிலுக்கு நாம் போகிறோம், எதற்க்காக போகிறோம்? கோயிலுக்கு போய் கடவுளுக்கிட்ட கேட்டால்  நல்லது நடக்கும்ன்னு நினைத்துதான்.

கோயிலுக்கு செல்பவர்கள் அனைவரும் தங்களுக்கு கடவுள் துணை நிற்பார், நிச்சயம் காப்பார் என நினைப்பது ஒரு நம்பிக்கை. நம்பிக்கை இருக்கும் இடத்திற்க்கு அடிக்கடி செல்வது நல்லதுதானே. அதற்க்காக தான்,  நம்ம வீட்டில் உள்ள பெரியவர்கள் நம்மை கோயிலுக்கு செல் என்று அறிவுறுத்திக்கொண்டே இருப்பார்கள்.

கோயில், கடவுள் இதையெல்லாம் நம்பிக்கையொடு அணுகினால் நம் நம்பிக்கை வலுபெறும். இங்கு நம்பிக்கைதான் கடவுளாக காட்சியளிக்கிறார். ஆமாம் அங்கு கற்சிலையாக வீற்றிருப்பது நமக்கு மேல ஒரு சக்தின்னு சொல்ற நம்பிக்கை. இந்த கடவுளை தேடிதான் நூற்றுக்கணக்கான மக்கள் வந்து கொண்டுயிருக்கிறார்கள். கோயிலுக்கு சென்றால், நல்லது நடக்கும்ன்னு நினைக்கிறது ஒரு நம்பிக்கைன்னா, அங்கு அதை தேடி ஆயிரம் கணக்கில் மக்கள் சென்று வருவதை பார்ப்பது நம் நம்பிக்கையை ஏறக்குறைய நிறைவேற்றியே விடும். எங்கு சென்றால் நம்பிக்கை வளருமுன்னு நினைக்கிறோமோ, அங்கு செல்வதில் தப்பில்லையே. நம் நம்பிக்கை வளர்க்கும் இடத்திற்கு செல்வதை அதிகமாக்குவோம். கடவுள் இருக்கிறாரா? என்று கேட்டால், கண்டிப்பாக சொல்லுங்கள் நம்பிக்கை தான் கடவுள், கடவுள்தான் நம்பிக்கைன்னு.

இப்ப சொல்லுங்க, நமக்கும் மேல ஒரு சக்தி இருக்கு, அதுதான் நம்மை காப்பாற்றி கொண்டுயிருக்கிறது என்பது உண்மைதானே.

ஆனந்தம்




Tuesday, 17 July 2018

பாடம் தந்த ரயில் பயணம்

சென்னையிலிருந்து திருச்சிக்கு ரயிலில் சென்று கொண்டிருக்கிறேன். ரயிலில் செல்வதே தனிசுகம் தான். ஐன்னலோர சீட்டு, அப்படியே கொஞ்சம் ஸ்நாக்ஸ், பக்கத்தில யாருன்னே தெரியாதவங்க. இதெல்லாம் ரயில் பயணத்தில் மட்டும் தான் அனுபவிக்கமுடியும். பஸ் பயணம், கார் பயணம், விமான பயணம் என எவ்வளவோ இருந்தாலும், ரயில் பயணம் மாதிரி வராது. இப்ப கொஞ்ச நாளாகத்தான் அடிக்கடி ரயிலில் போயிட்டு இருக்கேன். திருச்சியில சொந்தமாக வீடு கட்டிட்டுருக்கோம். அதனால அடிக்கடி பயணம்.

சொந்த ஊருக்கு அடிக்கடி போகிற பழக்கம் கிடையாது. (நேரம் கிடைக்காது) எப்போதாவதுதான் ஊருக்கு போவேன். அதுவும் அரசு பஸ்ஸில்தான். இப்பத்தான் டிக்கெட் விலை ஜாஸ்தியாயிடுச்சே. கட்டுபடியாகல. அதான் ரயிலில்.

ரயிலில் அடிக்கடி போய்ட்டு வரதினால, நிறைய சுவாரஷ்ய அனுபவம். இவ்வளவு நாளா இத மிஸ் பண்ணிட்டேன். govtkku தான் நன்றி சொல்லனும். பஸ் டிக்கெட் ஏத்தினதாலதானே, எனக்கு இந்த இனிமையான அனுபவம் கிடைச்சிருக்கு

நான் முடிவு பண்ணிட்டேன் இனிமேல் ரயிலில் தான் போகணும்ன்னு. இந்த ரயில் பயணம் நமக்கு மன தைரியத்தை நிறைய கொடுக்கும்கிறதனால சொல்றேன்.

வண்டி வேகமா போய்ட்டு இருக்கு. கொஞ்ச நேரத்தில், எல்லோரும் தெரிஞ்ச மாதிரி
பேச ஆரம்பிச்சிடுவாங்க. நீங்க எங்கே போணும்ன்னு ஆரம்பிச்சி, கடைசியில போன் நம்பர கொடுக்கிற அளவுக்கு போய்டுவாங்க. நிறைய குடும்ப கதைகள் கேட்கலாம். இடையில அவங்க வீட்ல நடந்த சன்டை எல்லாம் சொல்லுவாங்க. சொல்றவங்க வயசானவங்களா இருந்தா,  அவங்க தான் மாமியார், சின்ன வயசா இருந்தா, அவங்க மருமகள்ன்னு ஈசியா கண்டுபிடிச்சிடலாம். ஏன்னா,  முக்கால்வாசி மாமியார், மருமகள் சண்டையை பற்றித்தான் சொல்லிட்டு வருவாங்க. (இந்த சண்டை தீரவே தீராது போல) நல்ல வேளை எனக்கு மாமியாரும் இல்லை, நான் யாருக்கும் மருமகளும் இல்லை.

எனக்கு பக்கத்து சீட்ல ஒரு வயசானவர். ரொம்ப அழுக்கான ட்ரெஸ். துணியும் கொஞ்சம் கிழிஞ்சித்தான் இருக்கு. தமிழ் சுத்தமாவே தெரியல. அவர் பேசறது தெலுங்கு மாதிரி இருக்கு. யாரோ ஒருவர் எக்மோர் ஸடேஷனில் ஏறும்போது சாப்பாடு, தண்ணி மட்டும் வாங்கி கொடுத்தாங்க. அப்ப அவர் தெலுங்கில பேசினாரு. எனக்கு அவர் பக்கத்தில உட்கார்ந்தது கொஞ்சம் சங்கடமாகத்தான் இருந்திச்சி. ஆனாலும் வயசானவராச்சே, பார்க்கவும் பாவமா இருந்திச்சி. ரிசர்வ்ரேஷன் பண்ணி தான் வந்திருக்காரு. அப்போ அவர் சீட்ல அவர் உட்கார்ந்து தானே ஆகணும். கந்தையானாலும் கசக்கி கட்டு, கூலானாலும் குளித்து குடின்னு சொல்வாங்களே, அதுதான் ஞாபகத்துக்கு வந்திச்சி.

எனக்கு எதிர்புறம் மூணு பேர், எங்க பக்கம் மூணு பேர். எப்போதும் கலகலப்பா போகிற பயணம், இப்போ கொஞ்சம் அமைதியாகத்தான் இருந்திச்சி. அந்த பெரியவர் அங்க இருந்தது, யாரும் விரும்பலைன்னு தோணிச்சு. எல்லோரும் அவரை ஒரு மாதிரியாத்தான் பார்த்திட்டு வந்தாங்க. அவர் டிக்கெட் எடுக்காமல் வந்திருப்பார்ன்னுகூட பேசினாங்க.  நான் அவர் பக்கத்தில் உட்காந்திருந்ததால, எனக்கு எதிர்புறம் உள்ளவங்களையுடைய பார்வையை என்னால கவனிக்க முடிஞ்சிது. அவர் கால்ல செருப்பு கிடையாது, ஒரே ஒரு பேக். அதுவும் துவைச்சி பல மாதங்கள் ஆன மாதிரி இருந்துச்சி. இப்ப முதல் தடவையா இந்த மாதிரியான அனுபவம் கிடைச்சிருக்கு.

அந்த பெரியவருக்கு ஏதாவது உதவி வேணுமாண்ணு கேட்டு, செய்யலாமான்னு மனசில தோணிச்சு. ஆனா அவருக்கு தமிழ் தெரியல. எப்படி கேட்க்கிறது?

விருத்தாசலம் ஸ்டேஷன் வந்துச்சி. அந்த பெரியவர் அங்கதான் இறங்கினாரு. வயசானவரா இருந்தாலும் ரொம்ப வேகமா நடந்தாரு. அவர் வயசுக்கு இந்த நடையெல்லாம் நமக்கெல்லாம் சாத்தியமே இல்லேன்னு நினைக்கிறேன். (இந்த வயசிலலெல்லாம் கண்டிப்பா நாமெல்லாம் குச்சி வச்சித்தான் நடப்போம்)

அவர் நடக்கிறத பார்த்ததும், எனக்கு ஆச்சர்யமா இருந்துச்சி. அவர் எதைப் பற்றியும், யாரை பற்றியும் அலட்டிக்காமல் ஒரு வீறு நடைபோட்ட படியே இருந்தார்.

அவர்க்கிட்ட எந்த குறையும் இல்லாத மாதிரி அவர் நடை இருந்துச்சி. இப்ப என் மனதில் ஒரு உறுத்தல். உண்மையில,  நாங்க தான் மனதில் குறையோடு அவர் கூட உட்கார்ந்திருந்தோம். அவர்க்கிட்ட எந்த குறையும் இல்லை.

இதுவும் வாழ்க்கையில் நமக்கு பாடம்தான்....

இப்ப சொல்லுங்க, ரயில் பயணம் தனி அனுபவம் தானே.



Sunday, 15 July 2018

மாற்றம் ஏமாற்றாது

என்ன, வாழ்க்கை  ஒரே மாதிரியா இருக்கா? போரடிக்குதா? எப்பப் பாரு பிரச்சனையாவே இருக்கா? அப்போதிலிருந்து இப்போ வரைக்கும் ஒரே மாதிரியான மனநிலைமைதானா? வளர்ச்சியே இல்லையா? காலையில எழுந்ததிலிருந்து தூங்குற வரைக்கும் ஒரே மாதிரியான வேலையைத்தான் இழுத்துபோட்டு செஞ்சிட்டு இருக்கீங்களா?

சாம்பார், ரசம், காரகுழம்பு, கரிகுழம்பு, மீன் குழம்புன்னு  சதா ஒரே மாதிரியான சமையல் , அலுத்துப்போகுதுல்ல.

காலையில எழுந்திருக்கனும், பல் துலக்கணும், குளிக்கணும், சமையல் செய்யனும், சாப்பிடணும், துணி துவைக்கணும், டிவி பார்க்கணும், அப்புறம்  மதியம் தூக்கம். திரும்பவும்  அதே மாதிரியான் மீதி பாதி வேலை, துவைச்ச துணியை மடிக்கணும், அயர்ன் பண்ணணும், பாத்திரம் தேய்க்கணும் , வீட்டை சுத்தம் செய்யணும்...... ஏ ...அப்பா.....

காலம் காலமா இதையேத்தான் செய்யறோம். வாழ்க்கையோட ஒன்றாகிவிட்டது. பழகிப்போயிடுச்சி.

மேற்சொன்ன காரணங்கள் உங்களுக்கு மட்டுமில்ல, எல்லோருக்கும் இப்படித்தான் இருக்கு (நான் மட்டும் என்ன விதி விலக்கா) இதெல்லாம் மாறாது. இப்ப மட்டுமில்ல எப்போதுமே மாறாது. ஏன்னா, இதுதான் வாழ்க்கை. வாழ்ந்து தான் ஆகணும். வாழ்க்கை, வாழ்க்கையை மாத்திக்க முடியுமா? முடியாது.

வாழற நாமதான் மாத்திக்கணும்.  வாழ்க்கை ஒரே மாதிரியா கொண்டு போறதும், சுவாரஷ்யமா கொண்டு போறதும் நம்ம கையிலதான் இருக்கு.

வாழ்க்கையில பெரிய, பெரிய சாதனை பண்ணி சமுதாயத்தில் ஒரு பெயர் சொல்ற ஒரு ஆளா இருக்கிறவங்க, நம்மல மாதிரியே சலிச்சிகிட்டு இருந்திருந்தால், நாம அவங்களை பத்தி இப்போ பேசிகிட்டு இருப்போமா? ஒரு காலத்தில் அவங்களும் நம்ம சலிப்பு வாழ்க்கையை அனுபவிச்சவங்கத்தான்.

பெரிய பெரிய சாதனையெல்லாம் பண்ண வேண்டாம். நமக்கு தகுந்த மாதிரி, நம்மால என்ன செய்ய முடியும், என்ன மாதிரியான மாற்றங்களை கொண்டு வரமுடியுமுன்னு யோசிங்க.

உங்களுக்கு கோலம் போட தெரியுமா? ஓ...தெரியுமே. நான் தினமும் கோலம் போடுறேன். சரி....

கோலம் போட தெரியாதவங்க, முயற்சி செய்யலாமே? சின்ன சின்ன விஷயங்களில்தான் வாழ்க்கையின் பெரிய பெரிய சுவாரஷ்யமே இருக்கு. முதல்ல சின்ன சின்னதா கோலம் போட ஆரம்பிங்க. சரியா வரலேன்னு விட்டுடாதீங்க. முயற்சி மட்டும் தான் நம்முடைய மூலதனம் இங்கே. இன்னைக்கு பெரிய கோலம்போட்டு தெருவையே அசத்துறவங்க உங்களில் இருந்து வந்தவங்கதான். கோலம் போட ஆரம்பிச்சிட்டீங்கனா, நீங்களே வேண்டான்னு நினைச்சாலும் போடாமல் இருக்க முடியாது. கோலம் போடறது ஒரு கலை. கலையை கையில் எடுங்கள், கவலையை தள்ளி வையுங்கள்.

அடுத்து, உங்களுக்கு செல்ல பிராணின்னா பிடிக்குமா? ஓ... பிடிக்கும். அப்படின்னா உடனே வளர்க்க ஆரம்பிங்க. எத்தனை குடும்பத்தில் ஒரு செல்ல பிராணி, குடும்ப உறுப்பினராக இருக்கு தெரியுமா?. சொல்ல கேட்டு இருக்கேன். இப்ப நேரடியா உணர்ந்தும் இருக்கேன். உங்க வீட்டு நாயான்னு கேட்டா கூட முறைக்கிறாங்க. அது எங்க வீட்டு பாப்பா, பாப்பான்னு சொல்லுங்கன்னு சொல்றாங்க. அந்த பிராணியோட பாசம், குறும்புத்தனம், அறிவு, இதெல்லாம் பார்க்கும்போது  நம்மல்லாம் தோற்று போயிடுவோம். சில நேரங்களில் அதோட அறிவு நம்மை பிரமிக்க வைக்கும். செல்ல பிராணியோட செலவழிக்கிற நேரம் நம்ம மகிழ்ச்சிக்கு உத்தரவாதம்.

வீட்ல செடியெல்லாம் வளர்க்கிற பழக்கம் இருக்கா? இல்லைன்னா உடனே செடி வளர்க்க ஆரம்பிங்க. இன்றைய காலத்தில இதெல்லாம் இப்ப அவசியமாயிடுச்சி. அவசியம்  மட்டுமில்ல ஆரோக்கியமான விஷயமும்கூட.  செடிகூட நம்ம மகிழ்ச்சிக்கு காரணமாயிருக்குது. தினமும் அதை கவனிப்பது, பார்க்கிறது, தண்ணீர் விடறது, தொட்டு பேசறது, மொட்டு விட்டுருக்கா, பூ வந்திருக்கான்னு, காய் வந்திருக்கா என தினமும் நேரம் செலவு செய்றது நம்ம ஆரோக்கியத்துக்கு தேவையான ஒரு விஷயமாயிடுச்சி. கவலையை மறக்க வச்சிடும். காய் கறிகளை நாமளே இயற்கையா வளர்த்து சாப்பிடுவது  உடம்புக்கு, மனதுக்கு ஆரோக்கியம். செலவும் மிச்சம்.

பூக்கள் கட்டுவது கூட ஒரு கலைதான். சொந்தமா செடி வச்சிருந்திங்கன்னா பூ கட்டி நேரத்தை பயனுள்ளதாக்கலாம். இல்லைன்னா, உதிரியா பூக்கள் வாங்கி கட்டியும் பயன்படுத்தலாம். இந்த மாதியான விஷயங்கள் மூலம் நம் திறமையையும் வளர்த்துக்கலாம், தனிமையையும் இனிமையாக்கலாம் இதெல்லாம் சொல்லும்போது கொஞ்சம் சிரிப்பா கூட இருக்கலாம். நமக்கு கவலையிலிருந்து விடுபட ஒரு வழி வேணும். அதை மட்டும் மனசில வச்சிக்குங்க.

கைதொழில் ஒன்றை கற்றுக்கொள், கவலை உனக்கில்லை ஒத்துக்கொள்ன்னு  சொல்ல கேள்விபட்டிருக்கோம். இது நூற்றுக்கு நூறு உண்மை. இதை அனுபவிச்சி சொல்றேன். நமக்குள்ள என்ன தேடுதல் இருக்குன்னு முதல்ல கண்டுபிடிங்க. எதில் ஆர்வமுன்னு யோசிங்க. அதை செயல்படுத்த பாருங்க. வருமானம், தன்மானம் இரண்டும் தலை நிமிர வைக்கும்.

நமக்குள்ள எவ்வளவோ திறமை இருக்கு. செயல்படுத்த கொஞ்சம் சோம்பேறித்தனம். அதை செய்யலாமா, இதை செய்யலாமா? ன்னு உங்க நேரத்துக்கு தீனி போடுங்க. உங்களுக்கு என்ன பண்ணணும்ன்னு தோணுதோ, அதை தைரியமா செய்ங்க. நமக்கு ஒரு அடையாளம் இருக்கணும். தனியா தெரியணும். ஏதோ ஒரு விஷயத்தில் முன் மாதிரியா இருக்கணும். மாற்றங்கள் இருந்தால்தான் மாற முடியும்.

ஒரே மாதிரியான வாழ்க்கைக்கு பழகிட்டோம் மாற்றத்தை கொண்டு வர ஒரு தயக்கம். யாராவது, எதாவது சொல்லிட்டாங்கண்ணா? சொல்லட்டும். உங்களுக்கு என்ன அதைப்பத்தி? இப்ப மட்டும் என்ன உங்களை பத்தி பேசாமலா இருக்காங்க? இதெல்லாம் நம்மலே சொல்லிக்கிற காரணமாகத்தான் தோணுது. இன்னும் சொல்ல போனால் நம்மை சுற்றி இருப்பவர்களும் நம் மாற்றத்துக்கு காரணமாத்தான் இருக்காங்க. அவர்களுடைய பொருளாதார வளர்ச்சியும், நம்மை மேல செல்ல தூண்டுதலாத்தான் இருக்கும்

நம்ம வாழ்க்கையை நாமத்தான் வாழனும். நம்ம சுற்றி நடக்கிற ஒவ்வொரு மாற்றமும் நமக்கு பாதிப்பை ஏற்படுத்தும். மாற்றத்தை ஏற்படுத்திக்கிட்டே இருக்கணும். ஒரே மாதிரியான வாழ்க்கை அனுபவம் போதும். நம்ம வாழ்க்கை, நம்ம மாற்றம், நம்மை மட்டுமில்ல நம் கூட இருக்கிறவங்களுக்கும் ஒரு தூண்டுதலா இருக்கணும்.  மாறுங்க, மாறுங்க, மாற்றத்தை ஏற்படுத்துங்க.

மாற்றம் ஏமாற்றாது.

மாற்றம் முன்னேற்றமே...

ஆனந்தம்.






Saturday, 14 July 2018

அன்புக்கு அடிமை

அன்புக்கு மயங்காதவங்களே இந்த உலகத்தில் யாரும் இருக்க முடியாது. உச்சி முதல் பாதம் வரை நாம் அன்பாலே நிறைந்து இருக்கிறோம். ஆனால் ஏனோ அதை நாம் உணர மறுக்கிறோம். அதை செயல்படுத்த நம்மால முடியல. ஒருவிதமான இறுக்கத்தால கட்டி போட்டு விடுகிறோம். செயல்படுத்தாதனால செயலிழந்து மன கவலைக்கு ஆளாகிறோம்.

அன்பாக பார்க்கிறது, அன்பா நடந்துக்கிறது, அன்பாக பேசறது அப்படி என்ன கொடுமையான செயலா?

அன்பா பேசற ஒருத்தர், கடுகடுப்பாக பேசற ஒருத்தர்ன்னு  இரண்டு பேரை பார்க்கிறோம். பேசுறோம். இந்த இரண்டு பேர்ல யாரை நமக்கு பிடிக்கும்?  பேசுற இடம், பேசுற விஷயம் நமக்கு பிடிக்காமல் போனாலும் அங்கு அன்போடு நம்ம மனசுக்கு ஆறுதலான, உண்மையான பாசத்தோடு பேசுற ஒருத்தரைத்தான் நம் மனம் விரும்புது.

நாம் விரும்புவதை மற்றவர்கள் கொடுக்க வேண்டும் என நினைக்கிறோம். ஆனால் மற்றவங்களுக்கு நாம கொடுக்க மறுக்கிறோம். ஏன்?

ஏன்? முதல்ல நீ கொடு. அப்புறம் நான் தாரேன்.

இதென்ன காசா பணமா? கொடுத்தால் திரும்ப வராதுன்னு சொல்றதுக்கு. இதை கொடுத்தால்தான் திரும்ப வரும். அள்ளி அள்ளி கொடுக்கனும். கேட்காமலே கொடுக்கனும், திரும்ப திரும்ப கொடுக்கனும், நேரம் காலம் பார்க்காமல் கொடுக்கனும். இதுவும் ஒரு சொத்துதான். இந்த சொத்தை சம்பாதிப்பதுதான்  இப்ப பெரிய சவாலா இருக்கு

இதுக்கு என்ன மூலதனம், என்ன பண்ணனும்?

அன்பு.. அன்பு.. அன்புதான் மூலதனம். பெரியவங்க முதல் சின்ன குழந்தைங்க வரை இதை யாரும் வேண்டாண்ணு சொல்லவே மாட்டாங்க. ஆனால் நாம கொடுக்கிறோமான்னு உங்க மனசை கேட்டு பாருங்க. ம்ம் கொடுக்கிறாமே அப்படின்னு டக்குன்னு மனசு சொல்லுமே.

இல்லைங்க., நம்ம கொடுக்கிறது இல்லை. அன்புங்கிறது அவ்வளவு நல்ல விஷயம். உடம்பு பூரா நிறைஞ்சி கிடக்கு. ஆனால் அதை உபயோகிக்கிறோமா? அதட்டி கிதட்டி மிரட்டி உருட்டித்தான் நம்ம ஆள நினைக்கிறோம். மிரட்டினால் பணிவாங்க, பயப்புடுவாங்கன்னு நினைக்கிறோம். அந்த கண்டிப்பைத்தான் ஆயுதமாக்கிறோம். ஆயுதத்தால் அடிபட்டவன் அதற்க்கு நிரந்தரமாக இருக்க மாட்டான். அன்பை தேடுவான் அதை நோக்கி ஓடுவான். எங்கு கிடைக்குதோ அங்கேயே இருக்க விரும்புவான்.

மற்றவங்களை விடுங்க நீங்க இருக்க விரும்புவீங்களா?  அப்போ எதை செய்தால் நல்லது என்று நமக்கே தெரியும்போது நாம ஏன் அதை செய்ய மறுக்கிறோம். பொத்தி பொத்தி வச்சி என்னதான் பண்ணபோறோம்? அன்பை கையில் எடுக்க மறுக்கிறோம். எடுக்காதது  யார் தப்பு தெரியுமா? இருட்டில் பேய் இருக்குன்னு சொல்லியே வளர்த்திட்டாங்க. நாமலும் அப்படியே வளர்ந்திட்டோம். ஏன் இருட்டில் பேய்தான் இருக்கணுமா? கடவுள் இருக்கக்கூடாதா? இப்படியேதான் நல்லத சொல்லி நம்மல பழக்கல. செயல் பழக்கமாக மாறும். பழக்கம் குணமாக மாற்றிவிடும்.

இருட்டில் பேய் இல்லைன்னு எப்போ நம்ம நம்புறோமோ, அப்பத்தான் நேர்மறையான விஷயங்களை கையில் எடுக்கத்தோனும். கண்டிப்பு என்கிற விஷயமும் பேய்தான். அன்புங்கிற கடவுளை கையில் எடுங்கள்.

அன்பால செய்ய முடியாத விஷயம்ன்னு இந்த உலகத்தில எதுவும் இல்லை. பாரபட்சம் இல்லாமல் அன்பை கொடுங்க. கணவனுக்கு கொடுங்க, மனைவிக்கு கொடுங்க, பிள்ளைங்களுக்கு கொடுங்க, அம்மா அப்பாவுக்கு கொடுங்க. நண்பர்களுக்கு, உறவினர்களுக்கு கொடுங்க.

பாசத்தோட கனிவான பேச்சு உங்களை பெரிய இடத்தில் வைக்கும்.

மனதுதான் பெரிய இடம்.

ஆனந்தம்.

Friday, 13 July 2018

நாலு நல்ல வார்த்தை

நாம காலைல எழுந்ததுமே இன்னனைக்கு நாள் எப்படி போக போகுதுன்னு கவலையெல்லாம் எதுக்கு? நம்ம வேலைய மட்டும் பார்த்தாலே போதும். நடக்கறது தன்னாலே நடக்கும். நாம கேட்க்கிற விஷயம், பார்க்கிற விஷயம், சொல்ற விஷயம் மட்டும் நல்லா இருந்துச்சின்னா அட அன்னைக்கு பூராவும் சந்தோஷம் தான். 

நம்ம சரியா இருந்தா, நமக்கு ஏன் நல்லது நடக்காமல் போக போகுது. 

வாழ்க்கையில் நல்லது நடந்தாலும், நடக்காமல் போனாலும், அதற்க்கு நம்மதான் காரணமாய் இருப்போம். நம்மை சுற்றி இருக்கிற விஷயங்களை நல்லதா இருக்கிற மாதிரி பார்த்துகிட்டாலே போதும். நடக்கறது நல்லதாவே இருக்கும். 

ஆனந்தம்.